சென்னை:சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த மாதம் 22ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் காசோலை மோசடியில் ஈடுபட்டு பிடிபட்டது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் அமித்குமார் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ஒன்பது பேரை கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் ஒருவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த முருகன் என்பது தெரியவந்தது.
ஒன்பது பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வடமாநில நபர்களின் தொடர்பு இருப்பதாகக் கூறி வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த மோசடியில் ஈடுபட்ட தொண்டாமுத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையை கோவை சரக டிஐஜி முத்துச்சாமி எடுத்துள்ளார். அதன்படி, சார்பு ஆய்வாளர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:மதுரையில் வீட்டின்முன் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் எதிர்ப்பு