தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNUSRB SI EXAM: உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தொடங்கியது.. ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்! - எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது.

SI exam start
எஸ்ஐ தேர்வு துவக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:56 PM IST

காவல்துறை உதவி ஆய்வாளரின் 621 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு துவங்கியது

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதில் விருப்பமுள்ள பட்டதாரிகள், இணைய வழியாக ஜூன் 1 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 709 பேரும், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40 ஆயிரத்து 901 பேரும் என மொத்தம் 621 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 610 பேர் விண்ணப்பித்துள்ளனர். காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத காலிப் பணியிடங்களுக்கு 6 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கான தேர்வானது இன்றும் (ஆக.26), நாளையும் (ஆக.27) என 2 நாட்கள் நடைபெறுகிறது. பொது குழுவினருக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 மையங்களிலும், காவல்துறை சார்ந்த நபர்களுக்காக 12 மையங்களிலும் தேர்வு நடக்கிறது. இன்று பொது பிரிவினருக்கும், நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

காலையில் மெயின் தேர்வும், பிற்பகலில் தமிழ் தகுதித் தேர்வும் நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் எனவும், பின்னர் 9 மணியிலிருந்து நுழைவுச் சீட்டுடன், ஏதாவது ஒரு அரசின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும், எலக்ட்ரானிக் சாதனம் எதுவும் அனுமதியில்லை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்வானது காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரையும் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரையில் 6 தேர்வு மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது.

இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1500 தேர்வர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்காக 110 காவலர்களை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் மட்டும் சுமார் 100 சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:சந்திரயான் 3 வெற்றி எதிரொலி... இஸ்ரோவுக்கு பறந்து சென்ற 6,500 வாழ்த்துக் கடிதங்கள்!

ABOUT THE AUTHOR

...view details