பாரதிய ஜன சங்கத்தை நிறுவியரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு சென்னை தி-நகர் கமலாலயத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகை நமீதா, நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டபோது அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், கே.டி. ராகவன், வி.பி. துரைசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதையடுத்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எல்.முருகன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் நடிகை நமீதா, நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'கனிமொழி அரசியல் செய்யக் கூடாது; ரஜினி அரசியலை வரவேற்பேன்' - பாஜக தலைவர் எல். முருகன்