சென்னை:மதுரை மாவட்டம், வில்லாபுரம் பகுதியை சோ்ந்தவர் ஜெயரட்சகன். இவரது மகள் (Shuttler Jerlin Anika) ஜொ்லின் அனிகா(18). இவர் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கிறார். சிறு வயது முதலே பேட்மிண்டன் (Badminton) விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மாநகராட்சிப் பள்ளியில் படித்துக்கொண்டே மாநில, தேசிய மற்றும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்றார்.
காதுகேளதோர் பேட்மிண்டன் பிரிவில் ஜெர்லின் அனிகாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 'அர்ஜுனா விருது' வழங்கினார். அர்ஜுனா விருதைப் பெற்றுகொண்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று (டிச.2) சென்னை வந்தடைந்த ஜெர்லின் அனிகாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.