தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமை தாங்க, முன்னாள் துணை வேந்தரும் நீரிழிவு துறை சிறப்பு மருத்துவருமான சாந்தாராம் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன் பெரியாண்டவர் உள்ளிட்டோர், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
சுதா சேஷய்யன் நிகழ்ச்சி பற்றிய விரிவுரை
பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் நிகழ்த்திய உரையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை தொடக்கி உள்ளோம். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். புதிது புதிதாக பல்வேறு நோய்கள் குறித்து கூறுகிறார்களே? நாம் என்ன உணவு உண்ணலாம், குழந்தைகளுக்கு என்ன உணவினை அளிக்கலாம் போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக் கொள்ள கூடிய வகையில் தெளிவான மருத்துவ முறைகளை அவர்களுக்கு கூறுவதற்கான நிகழ்ச்சிதான் மக்களுடன் சந்திப்பு ஆகும்.
மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கம்