தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைக்கு உத்தரவு! - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

shrc-directs-tamil-nadu-government-to-ensure-24-hour-ambulance-in-all-government-hospitals அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்'
shrc-directs-tamil-nadu-government-to-ensure-24-hour-ambulance-in-all-government-hospitals அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்'

By

Published : Apr 12, 2022, 1:57 PM IST

சென்னை:வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, சிங்கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி லோகேஸ்வரி, பிரசவத்துக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

பிரசவ வலியில் துடித்த போதும், அவருக்குக் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவமனையில் காலை 11 மணிக்கு சேர்ந்த நிலையில், மாலை 6 மணிக்கு தான் மருத்துவர் வந்து பார்த்துள்ளார். அதன்பின் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால், தனியார் ஆம்புலன்சில் 2000 ரூபாய் கட்டணம் செலுத்திச் சென்ற அவருக்கு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லோகேஸ்வரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மாநில மனித உரிமை ஆணையம்

இதனிடையே, இந்த மனுவை நேற்று (ஏப்.11) விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மருத்துவர்கள் இல்லாததும் ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்யும்படி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்படியும், தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய கனரக வாகன ஓட்டுநர்கள்: 11 லாரிகள் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details