தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் தொகுதியில் கூச்சல் குழப்பம்! - tamilnadu election result 2021

சுயேச்சை வேட்பாளரால் கொளத்தூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம்

ஸ்டாலின் தொகுதியில் கூச்சல் குழப்பம்
ஸ்டாலின் தொகுதியில் கூச்சல் குழப்பம்

By

Published : May 2, 2021, 6:10 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் கொளத்தூர் வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பின் வாக்கு பதிவு தொடங்கியது. அப்போது சுயேட்சை வேட்பாளர், தான் வரும் முன்னே துவக்கியதற்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் லேசாக உடைக்கப்பட்டு இருந்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் திமுக ஏஜெண்டுகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் தேர்தல் அலுவலர் சமாதானமாக இருக்க கூறியும் சுயேட்சை வேட்பாளர் அமைதியாக இல்லாத காரணத்தால், காவல் துறையினரை அழைத்து, சுயேட்சை வேட்பாளரை அறையை விட்டு வெளியேற்றுமாறு கூறினார். இதற்கு பிற கட்சி ஏஜெண்டுகள் வேட்பாளரை தேர்தல் அலுவலர் எவ்வாறு வெளியேற்றலாம் என கேள்வி எழுப்பியதையடுத்து, தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கை அறையிலேயே சுயேட்சை வேட்பாளரை இருக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details