தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சத்தியமங்கலம் நகராட்சியில் மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது' - sewage treatment plant

சென்னை: சத்தியமங்கலம் நகராட்சியில் தேர்வுசெய்யப்பட்ட இடத்தை விடுத்து, மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Mar 4, 2021, 10:18 PM IST

ஈரோடு சத்தியமங்கலத்தில் தேர்வுசெய்யப்பட்ட இடத்தை விடுத்து, மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சியில் கோட்டு வீராம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நிலையத்தை ஆர்.எம்.பி. நகரில் அமைக்க நகராட்சி திட்டமிட்டது. திட்டமிட்ட திட்டப்பணிகள் தொடங்கவிருந்த நிலையில், திடீரென ஆர்.எம்.பி. நகரிலிருந்து, ரங்கசமுத்திரத்துக்கு மாற்ற நகராட்சி முடிவுசெய்துள்ளதாகக் கூறி, அதை எதிர்த்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.கே. ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆர்.எம்.பி. நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இடத்தை மாற்ற முடியாது என சத்தியமங்கலம் நகராட்சி திட்டவட்டமாகக் கூறியதால், வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தற்போது ரங்கசமுத்திரம் என்ற இடத்திற்கு நகராட்சியே திட்டத்தை மாற்றம் செய்துள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஆர்.எம்.பி. நகரில் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதித்துள்ளதால் மாற்று இடமான ரங்கசமுத்திரத்தில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ரங்கசமுத்திரத்திற்கு திட்டத்தை மாற்ற முடிவெடுத்தது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சத்தியமங்கலம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details