சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று (ஆக.25) குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றது. புழல் பகுதியைச் சேர்ந்த கென்னி ஜான் என்பவரை ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு கென்னி சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு மேலாளர், இன்று உங்களுக்கான காட்சி எதுவும் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி உள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த கென்னி ஜான், தனது செல்போனில் இருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.