சென்னை : சட்டப்பேரவையில் மானியக்கோரி மீதான விவாதம் நடைப்பெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி பதிலுரையில் வழங்கினார். அதில், மக்களுக்கு பயன்பெறும் வகையில் பொது நோக்கோடு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 60 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 393.7 கோடி ரூபாய் செலவில் வண்டலூர் விளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து முனையம் 2022ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.
2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் ஒரு லட்சம் தரமான வீடு கட்டித்தருவதாக உறுதிப்படுத்தி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் நில உரிமையாளருடன் கலந்து பேசி 40 சதவீதம் உரிமையாளருக்கு கொடுத்து வீடுகள் கட்டித்தரப்படும்.