தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்க்கெட் சங்க தேர்தலை நடத்தக்கோரி கடையடைப்பு போராட்டம்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோட்டில் நேதாஜி மார்கெட் சங்க தேர்தலை நடத்தி வலியுறுத்தி தினசரி மார்க்கெட்‌ காய்கறி வியாபாரிகள்‌ சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு போராட்டம் குறித்து பேசுவது தொடர்பான காணொலி
கடையடைப்பு போராட்டம் குறித்து பேசுவது தொடர்பான காணொலி

By

Published : Oct 8, 2021, 10:26 PM IST

ஈரோடு: ஈரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட்‌ தற்காலிகமாக வ.உ.சி பூங்கா மைதானத்தில்‌ இயங்கி வருகிறது. இந்நிலையில் நேதாஜி தினசரி மார்க்கெட்‌ காய்கறி வியாபாரிகள்‌ சங்கத்தினர் திடீரென இன்று (அக்.8) ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ‌ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்த அனுமதி மறுப்பு

இதுகுறித்து வியாபாரிகள் பேசுகையில், “எங்களது சங்கத்தின் தேர்தல்‌ கடைசியாக கடந்த 2014ஆம்‌ ஆண்டு நடைபெற்றது. இந்த சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள்‌ பதவி காலம்‌ கடந்த 2019 ஆம் ஆண்டுடன்‌ முடிவடைந்தது.

பின்னர் உறுப்பினர்களிடம்‌ கையொப்பம்‌ பெற்று கடந்த செப். 27 முதல் அக்.6 வரை தேர்தல்‌ நடத்த திட்டமிட்டிருந்தோம்‌. இதற்கு காவல்‌ துறையினர், மாநகராட்சி ஆணையர்‌ உள்ளிட்டோர் அனுமதி மறுத்து விட்டனர்‌. சங்கத்தில் முன்னாள்‌ பொறுப்பாளர்கள்‌, குத்தகைதாரர்கள்,‌ கட்சி பிரமுகர்கள்‌ தூண்டுதலின்‌ பேரில்‌ நான்கு உறுப்பினர்கள்‌ பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பு போராட்டம் குறித்து பேசுவது தொடர்பான காணொலி

இதனால் பிரச்னைகள் முடிந்த பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என நால்வரும் புகார்‌ அளித்துள்ளதாக காவல் துறையினர்‌ தெரிவித்துள்ளனர்‌. மொத்தம் 807 பேரை‌ உறுப்பினர்களாக கொண்ட இந்த சங்கத்தில, 370 பேர்‌ மட்டுமே ரூ. 90 ஆயிரம் வீதம்‌ பணம்‌ செலுத்தி வந்துள்ளனர்.

ஒருநாள் தினசரி மார்கெட் வியாபாரம் நிறுத்தம்

புகாரளித்த நால்வரில்‌ இருவர்‌ பணம்‌ கட்டாதவர்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது. காய்கறி மார்க்கெட் இடமாற்றம் தொடர்பாக‌ எங்கு சென்றாலும், சங்க பொறுப்பாளர்கள்‌ இலலாமல்‌ பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. மேலும் காவல்‌துறையால்‌ கூறப்பட்ட இரண்டாவது காரணமான‌ சுங்க கட்டண பிரச்னைக்கும்‌, அரசு நிர்ணயித்த ரூ. 16 கட்டணத்திற்கு பதிலாக ரூ. 50 செலுத்த சம்மதித்து செயல்படுத்தி வருகிறோம்.

அதன்‌ பிறகும்‌ குத்தகைதாரர்கள்‌ எங்களது காய்கறி வியாபாரிகளின் நலன் சார்ந்த தேர்தல்‌ விஷயத்தில்‌ குறுக்கீடு செய்கின்றனர்‌. ஆகையால் ஜனநாயக முறைப்படி தேர்தல்‌ நடத்தி புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதியும்‌, பாதுகாப்பும் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்படி இன்று (அக்.8) ஒருநாள் தினசரி மார்கெட் வியாபாரத்தை நிறுத்தி ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details