சென்னை:11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 90.93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், 70 ஆயிரத்து 431 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா இன்று (மே 19) வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டன.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வினை தமிழ்நாட்டில் உள்ள 7549 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவிகளும், 3 லட்சத்து 61ஆயிரத்து 454 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் எழுதினர். அவர்களில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தேர்ச்சி சதவீதம் 90.93 சதவீதமாக உள்ளது. இதே நேரத்தில் 23 ஆயிரத்து 421 மாணவிகளும், 47 ஆயிரத்து 10 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ள நிலையில் மொத்தமாக இந்தத் தேர்வில் 70,431 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:TN SSLC Result: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!