வியாசர்பாடி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அப்பகுதியில் விநாயகா ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை, இவர் கடையிலிருந்தபோது இரண்டு நபர்கள் நகை வாங்குவது போல அங்கு வந்துள்ளனர்.
பட்டப்பகலில் மோதிரங்களுடன் தப்பியோடிய இளைஞர்கள் - theft
சென்னை: வியாசர்பாடியில் இயங்கிவரும் நகைக் கடை ஒன்றில், உரிமையாளரை தாக்கிவிட்டு இரண்டு இளைஞர்கள் மோதிரங்களுடன் தப்பியோடிய சம்பவம் சிசிடிவில் பதிவாகியுள்ளது.
அப்போது, மோதிரங்களை ஒருவர் மாற்றியொருவர் அணிந்துபார்த்து கடைக்காரரை திசைதிருப்ப முயன்றனர். இதில், சுதாரித்துக் கொண்ட கடைக்காரர் மீண்டும் மோதிரங்களை திரும்பிதர கேட்டபொழுது, ஒருவர் வெளியேற, மற்றொருவரை கடைக்காரர் பிடித்துக்கொண்டார். இதில் நடந்த சண்டையில், கடைக்காரரைத் தாக்கிவிட்டு அந்த நபரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவமானது கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த அதரங்களுடன் வியாசர்பாடி காவல் துறையினரிடம் கடைக்காரர் சந்தோஷ் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடி இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.