தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சக்தி மசாலாப் பொடியில் புழு: நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் - பிரபல உணவு மசாலா தயாரிக்கும் தனியார்

சென்னை: சக்தி மசாலா நிறுவனத்தின் மசாலாப் பொடியில் புழு இருந்ததால், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Shakti masala distribute expired products
Shakti masala distribute expired products

By

Published : Feb 6, 2020, 10:38 AM IST

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த காமேஷ் என்பவர் சக்தி மசாலா நிறுவனம் தயாரித்த பருப்புப் பொடி பாக்கெட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார். அதைப் பிரித்து பார்த்தபோது, பொடி முழுவதிலும் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட் சென்ற காமேஷ், காலாவதியாக 6 மாதங்கள் இருக்கும் நிலையில் பொடி கெட்டுப்போனது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால், ”விற்பனை செய்வது மட்டுமே நாங்கள், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிடுங்கள்” என்று சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.

அதன்பின், சக்தி மசாலா நிறுவனம் மீது மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காமேஷ் புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிண்டியிலுள்ள உணவுப் பகுப்பாய்வகத்தில், புழு இருந்த மசாலாப் பொடியை சோதனைக்கு அனுப்பினார். சோதனையின் முடிவில் அந்த பருப்புப் பொடி பாதுகாப்பற்றது எனவும் அதில் 60 புழுக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனப் பொருளில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (பிப். 04) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சக்தி மசாலா நிறுவனத்தின் தரப்பில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

ABOUT THE AUTHOR

...view details