சென்னை:தமிழ்நாட்டில், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சி, வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால், அவரது பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் தொடர்ந்து எழுந்தன. தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.