தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட் தொற்றிலிருந்து 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்கும் ஷீல்டு 30 - corona news

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வரும் நிலையில், தொற்றுநீக்கல் தொழில்நுட்பம் ஷில்டு 30 என்ற தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றிலிருந்து 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்கும் ஷீல்டு 30
கோவிட் தொற்றிலிருந்து 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்கும் ஷீல்டு 30

By

Published : Apr 28, 2021, 8:38 PM IST

சென்னை:நியூசிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நீர் அடிப்படையிலான நுண்ணுயிரிகளுக்கு எதிரான மேற்பரப்பு தூய்மையாக்கல் தொழில்நுட்பமானது, கரோனா வைரஸ்களின் தொற்றிலிருந்தும் மற்றும் பல்வேறு நோய்க்கிருமிகளிலிருந்தும் 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்குகிறது .

தொற்று ஏற்பட்டுள்ள மேற்பரப்புகளின் வழியாக கோவிட் வைரஸ் பரவுவதால், மேற்பரப்பின் வழியாக நோய்ப்பரவல் ஒரு பெரும் ஆபத்தாக தொடர்ந்து இருந்து வருகிறது. சார்ஸ் கரோனா வைரஸ் – 2 பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெய்ன்லஸ் டீல் மேற்பரப்புகள் மீது 6 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

புத்தகங்கள், ஆடைகள், மருத்துவ அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் முககவசங்கள் உட்பட, எந்தவொரு கடினமான பொருட்களிலும் பல நாள்கள் தொற்றுக்கிருமிகள் இருக்கக்கூடும். ஆகவே, பல நபர்கள் வழக்கமாக பயன்படுத்துகின்ற பொதுஇடங்களில் மேற்பரப்புகள் மற்றும் பொருட்களில் அடிக்கடி தொற்றுநீக்கல் நடவடிக்கையை மேற்கொள்வது முக்கியமாகும்.

வேதிப்பொருள் அடிப்படையிலான சானிடைசர்களுக்கு மாறாக, நீர் அடிப்படையிலான ஒரு கரைசலாக உருவாக்கப்பட்டுள்ள ஷீல்டு 30- ல் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களும், ஆல்கஹாலும் இடம்பெறவில்லை. மக்கள், விலங்குகள், தாவரங்களுக்கு அருகே இதைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

நோய்க்கிருமிகளை கொல்ல நச்சுப்பொருளையோ அல்லது நீர்ச்சத்து இழப்பையோ ஷீல்டு 30 சார்ந்திருக்கவில்லை. இதற்குப் பதிலாக, மேற்பரப்புகள் மீதும், நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற கதவு குமிழ்கள், கைப்பிடிகள், நாற்காலிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை மீது லட்சக்கணக்கான மிக நுண்ணிய அளவிலான ஊசிகளின் ஒரு படுகை போன்ற சகப்பிணைப்பை இது உருவாக்குகிறது. கரோனா வைரஸ்கள் உட்பட, நோய்க்கிருமிகளையும், பாக்டீரியா, பூசனம் போன்றவற்றையும் இந்த ஊசிப்படுகை கவர்ந்திழுக்கிறது, அவைகளின் உயிரணு அமைப்புகளை குத்திக்கிழித்து அவைகளை கொல்கிறது.

இதனை ஒருமுறை பயன்படுத்தும்போது அது வழங்கும் பாதுகாப்பு ஏறக்குறைய 30 நாட்களுக்கு நீடிக்கிறது என்பது இதன் தனிச்சிறப்பு அம்சமாகும். ஷீல்டு 30 தொழில்நுட்பத்தை உருவாக்கிய நியூசிலாந்தில் கரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது .

ஷீல்டு 30 ஐ மிக்சிறப்பாக பயன்படுத்துகின்ற பயனாளிகளுள் ஒன்றாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் தலைவர் குருசங்கர் கூறும்போது,“நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மேற்பரப்புகளின் வழியாக வைரஸ்கள், நச்சுயிரிகள், பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக 99.99 விழுக்காடு பாதுகாப்பை ஷீல்டு 30 வழங்குகிறது.

இதன் மிகச்சிறப்பான பாதுகாப்பு பண்பியல்பினால் வரவேற்பு பிரிவிலிருந்து, அறுவைசிகிச்சை அரங்குகள்வரை எமது ஒட்டுமொத்த வளாகம் முழுவதிலும் ஷீல்ட 30 தொற்றுநீக்கல் திரவம் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தியிருக்கின்ற நியூசிலாந்து மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஷில்டு 30-ஐ பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஷீல்டு 30 மூலம் தொற்றுநீக்கல் செய்யப்பட்ட உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் கரோனா வைரஸ் உடன் நுழைந்து, அங்குள்ள மேஜை உட்பட, எதையாவது தொட்ட உடனேயே அந்த நோய்க்கிருமியானது கொல்லப்பட்டு விடும்.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்-வர்த்தக தளங்களிலும் ஷீல்டு 30 வலைதளத்திலும் (www.shield30.in), மருந்தகங்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள, மால்கள் போன்ற சில்லரை விற்பனையகங்களிலும் ஷீல்டு 30 தொற்றுநீக்கல் திரவங்களை இந்தியாவில் பெற முடியும்.

ABOUT THE AUTHOR

...view details