தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய காவல்துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
108வது சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு - ஸ்டாலின்
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் ஜிவால், 108வது சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.
1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் சங்கர் ஜிவால். பின்னர் சேலம், மதுரை எஸ்பியாக பணியாற்றிய அவர், மத்திய போதை பொருள் மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய அரசு பணியில் 8 வருடமும், திருச்சி காவல் ஆணையராகவும், ஐஜி உளவுத்துறை ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக அவர் பொறுப்பேற்றார்.