தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை நேரில் பாராட்டிய சங்கர் ஜிவால்! - வங்கி மேலாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

சென்னையில் கன மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக துரிதமாக செயல்பட்ட வங்கி மேலாளராகிய முகமது அலி ஜின்னா என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை நேரில் பாராட்டிய சங்கர் ஜிவால்
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை நேரில் பாராட்டிய சங்கர் ஜிவால்

By

Published : Jan 4, 2022, 1:56 PM IST

சென்னை:சென்னையில் கடந்த டிச.30 அன்று பெய்த கனமழை காரணமாக, அன்றைய தினம் மாலை பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, இரவு அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

இதைக் கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் அவரது இருசக்கர வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களைச் சிறிது சிறிதாக நகர்த்தச் சொன்னார்.

சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

அதன் பிறகு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தே சென்று 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல உதவினார்.

வங்கி மேலாளரை நேரில் பாராட்டிய சங்கர் ஜிவால்!

இதனையடுத்து, அவர் குறித்த விசாரணையில் அவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் எனத் தெரிந்தது.

பாரிமுனை ஐடிஎஃப்சி தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சமூக சேவகராக இவர், கடந்த 8 ஆண்டுகளாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 02.00 மணி வரையில் அவசர சிகிச்சைப் பிரிவில் விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து, அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 3 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட நடந்து சென்ற முகமது அலி ஜின்னாவை நேற்று (ஜன.3) நேரில் அழைத்து அவரது சேவையைப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இதைப்போல, மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதிகள் வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார். கடந்த 2021ஆம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு, கணினி வழி குற்றப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நாகஜோதி கணினி வழி குற்றப்பிரிவு, கூடுதல் துணை ஆணையாளர் ஷாஜிதா, உதவி ஆணையாளர் வேல்முருகன், காவல் ஆய்வாளர் வினோத்குமார், மற்றும் ஆண் காவலர்கள், பெண் காவலர்களுக்கு வெகுமதிகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி காவல் ஆணையர் பாராட்டினார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக துரிதமாக செயல்பட்ட வங்கி மேலாளர்

இதேபோல, நில அபகரிப்பு மோசடி பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து அநேக வழக்குகளை முடித்த காவல்துறையினருக்கு காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளைக் கைது செய்த வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவைச் காவல்துறையினருக்கு காவல் ஆணையாளர் வெகுமதிகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க:SA vs IND: முதல் நாளில் இந்தியா ஆல்-அவுட்; ராகுல், அஸ்வின் ஆறுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details