தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேடையில் நடனம் ஆடிய ஷாருக்கான்.. அரங்கை அதிர வைத்த 'ஜவான்' பட விழா! - Shah Rukh Khan dance

Jawan Pre Release Event: சென்னையில் நடந்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஷாருக்கான் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிகழ்வு அரங்கையே அதிர வைத்துள்ளது.

ஜவான்  இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் நடனம்
ஜவான்- ஷாருக்கான்(கோப்புப்படம்)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 6:04 PM IST

சென்னை: ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு நடனங்களை மேடையில் ஆடி, அரங்கத்தை அதிரவைத்து, ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கினார் ஷாருக்கான்.

அட்லீ இயக்கத்தில், கௌரி கான் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 30) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதனால், கல்லூரி அரங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியில், ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஜவான் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் வந்திறங்கியபோது, ரசிகர்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க:சந்தானத்தின் கிக் முதல் காதல் காவியம் குஷி வரை ரசிகர்களை ரசிக்க வைக்கும் இந்த வார மூவி ரிலீஸ்!

மேலும், ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வந்த ஷாருக்கான் அடுத்து வந்த நடிகர் விஜய் சேதுபதியைக் கட்டிப்பிடித்து வரவேற்றார். விஜய் சேதுபதி அரங்கிற்குள் நுழைந்ததும் அரங்கமே ரசிகர்களின் கரகோஷத்தில் அதிர்ந்தது. மேலும், ஷாருக்கான் அனிருத்திற்கு முத்தம் கொடுத்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அனிருத் ரசிகர்களுடன் இணைந்து ஜவான் பட பாடலை பாடியதால், ரசிகர்கள் கொண்டாட்டத்திலிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, யோகி பாபு அரங்கிற்குள் நுழைந்ததும் ரசிகர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. விஜய் சேதுபதி, ஷாருக்கானுக்குக் கூட இத்தனை கைதட்டல் வரவில்லை. மேலும், அனிருத் பாடிய போது ஷாருக்கானும் அவருடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பிரியாணி ஷாருக்கானை நடனமாட அழைத்தபொழுது அவரும் மேடையில் ஏறி நடனமாடினார்.

மேலும், ஜாபர் நடனக்குழுவினர், ஷாருக்கானை நடனம் ஆட அழைத்த பொழுது அவர் தனது வேர்வையையும் பொருட்படுத்தாமல் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பின்னர், நடன கலைஞர்களுடன் பேசி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து, ஷாருக்கான் பேசும்போது, படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தமிழில் ஒரு அடைமொழி சொல்லி மகிழ்ந்தார். இறுதியாக தனது கைகளை விரித்து ஐகானிக் ஸ்டெப்பை போட்டு அனைவருக்கும் நன்றி தெறிவித்து விடைபெற்றார்.

இதையும் படிங்க:Nayanthara Instagram : இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா... குழந்தைகள் வீடியோ வெளியிட்டு அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details