தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!

சென்னை: திருமுல்லைவாயிலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

arrest

By

Published : Nov 22, 2019, 7:11 AM IST

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்திவருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஷேக்முகமது அடிக்கடி ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவரது14வயதுமகளுக்கு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட ஜெயலட்சுமி, ஷேக் முகமதை கண்டித்துள்ளார். தவறுக்கு வருந்துவதாகக் கூறி ஜெயலட்சுமியின் காலில் விழுந்து ஷேக் முகமது மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இவர்களின் தகாத உறவு மீண்டும் தொடர்ந்துள்ளது. ஆனால் ஷேக் முகமதோ,ஜெயலட்சுமியிடம் அவரது மகளை திருமணம் செய்து தரும்படி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தால், அவரை ஷேக்முகமது சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்

இந்த விவகாரம் குறித்து ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் ஷேக்முகமதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

ABOUT THE AUTHOR

...view details