சென்னை:வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து 35 வயது பெண், ஜனவரி 16ஆம் தேதி அன்று பெற்றோரை வழியனுப்புவற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு 6ஆவது நுழைவாயில் வழியாக தனியாக சென்ற அவரிடம், குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கூச்சலிட்டதால் உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த ரயில்வே போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பிடித்தனர். இந்த இளைஞரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர், யானைக்கவுனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும், தனியார் கொரியர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.