தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - நான்கு பேர் கைது!

சென்னை: அண்ணா சாலையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவ்லதுறையினர் கைது செய்தனர்.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - நான்கு பேர் கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - நான்கு பேர் கைது

By

Published : Jun 12, 2021, 9:08 PM IST

சென்னை அண்ணா சாலையை சேர்ந்த சிறுவனின் தாய் ஒருவர் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (ஜூன். 11) புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ’’தனது மகன் உட்பட அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள், கடந்த 9 ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிவிட்டு வந்தனர்.

அதன்பிறகு, தனது மகன் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடவில்லை, எனவும் பயத்துடேன இருந்ததால் தனது மகனிடம் விசாரித்தேன். அப்போது, மகன் உட்பட மூன்று சிறுவர்களும் விளையாட சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர், சிறுவர்களையும் விளையாடுவதாக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அந்த நான்கு பேர், அருகாமையில் உள்ள கட்டிடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுது கொண்டே தெரிவித்தான். எனவே, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கைது செய்ய வேண்டும்’’ என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த மாதவன்(18), மாயி(19), இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஏற்கெனவே மாயி செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details