சென்னை - பூக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் முன்களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி ஏழு கிணறு போர்ச்சுகீசியர் தெருவில் உள்ள வீடுகளில் கரோனா பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வசிக்கக்கூடிய சதக்கத்துல்லா எனும் முதியவர், தன் வீட்டில் உள்ள நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னர் திடீரென கதவை மூடி, இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.