தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஹரிணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். பணி நிமித்தமாக தனது மகளை சாலிகிராமத்திலுள்ள தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தனது சித்தியின் வீட்டில் வளர்ந்த 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதால் சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமி தனது சித்தியின் வீட்டில் இருந்தபோது சித்தியின் கணவர், சித்தி, அவர்களது உறவினர் ஒருவர் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.