தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! - பாலியல் வன்புணர்வு

ஆந்திராவை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவலர்கள் கைது செய்தனர்.

sexual harassment for 10 years old girl  sexual harassment  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  குற்றச் செய்திகள்  பாலியல் வன்புணர்வு  சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
10 வயது சிறுமிக்கு பாலியல்

By

Published : Jul 16, 2021, 12:49 PM IST

சென்னை:ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் கடந்த 11ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 15) மாலை 4.30 மணியளவில் சிறுமி மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்தி (59) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிடவே, அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி தப்பியோடிவிட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details