சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு அவரது பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி (36) என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சிறுமி, தனது தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.