தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா வாய்ப்பு: இளம்பெண் பாலியல் வன்புணர்வு? - etv bharat

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக இளம்பெண் கொடுத்த புகாரை ஜூலை 24ஆம் தேதி அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு

By

Published : Jul 21, 2021, 5:12 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் (24) சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். அடையாறு பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரிகிறது.

சினிமா வாய்ப்பு வாங்கித் தராததால் கணேஷிடம் அந்தப் பெண் முறையிட்டுள்ளார். அதற்கு கணேஷ் முறையான பதிலளிக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில் நேற்று (ஜூலை 20) அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை ஏமாற்றியவர்களை அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜூலை 24 ஆம் தேதி விசாரிக்க உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கணேஷ், அந்தப் பெண்ணுடன் தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்பெண் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

முழுமையான விசாரணைக்குப் பிறகே புகார் குறித்த உண்மைத்தன்மை தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு: 6 பேர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details