தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து! - Sexual Harassment case

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sexual Harassment case, teacher rajagopalan bail dismissed, pocso court order
பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து

By

Published : Jun 5, 2021, 6:33 PM IST

சென்னை:சென்னை கே.கே. நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஆசிரியர் ராஜகோபால் மீது கே.கே. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 24 ஆம் தேதி ராஜாகோபால் கைதானார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ராஜகோபாலனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை ஏற்ற நீதிமன்றம், மூன்று நாள் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து 3 நாள் காவல்துறை காவல் முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபால் சார்பில் தாக்கல் செய்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, எனவே ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிட்டார்.

ராஜகோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, ஏற்கனவே காவல்துறை தங்களின் காவலில் எடுத்து விசாரித்து விட்டதாகவும் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் இரண்டாவது முறையாக இன்று விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details