சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் சிக்கிவருகின்றனர். இதில் ஏற்கனவே நான்குப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பள்ளிகளுக்கு, மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.