செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி சர்வதேசப்பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
சிவசங்கர் பாபாவுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்! - மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு
15:35 June 15
சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க சிபிசிஐடி காவல் துறையினர், அவரை தேடப்படும் குற்றவாளியாக (லுக் அவுட்) அறிவித்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய பாரதி, தீபா என்ற பெண் ஆசிரியர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க சிபிசிஐடி காவல் துறையினர், அவரை தேடப்படும் குற்றவாளியாக (லுக் அவுட்) அறிவித்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்? டேராடூன் விரைந்த சிபிசிஐடி