தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - காவல் துறை விசாரணை! - college student Sexual harassment

சென்னை : கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sexual harasement
Sexual harasement

By

Published : Dec 4, 2019, 9:10 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (20). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விஸ்காம் படித்து வருகிறார். இந்நிலையில், கீதாஞ்சலி தனது நண்பர்களான பெரோஸ் கான், ஆல்பன் ஆகியோருடன் இணைந்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

அப்போது, கீதாஞ்சலியிடம் நண்பர்களான பெரோஸ் கான், ஆல்பன் ஆகிய இருவரும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கீதாஞ்சலி அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details