தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டாம்! - பாலியல் வன்கொடுமை

சென்னை: நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் என்று சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

sexual

By

Published : Jul 10, 2019, 7:34 PM IST

கடந்த ஜூன் 27ஆம் தேதியன்று திருமுல்லைவாயிலில் நான்கு வயது பெண் குழந்தையை கொடூரமாகக் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கினை விரைவாக விசாரிக்காவிட்டால் குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதற்கு வாய்ப்பாகிவிடும் என்பதால், வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், யாரும் குழந்தையை கொன்ற மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி ஆகியோருக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது என்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் வேண்டுகோள் விடுத்து கேட்டுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details