தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிதமான கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - WEATHER NOWCAST FOR TAMILNADU AND PUDUCHERRY

சென்னை: டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
கனமழை

By

Published : Jan 15, 2021, 9:28 AM IST

மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஜனவரி 15) லேசானது முதல் மிதமான மழையும், தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (ஜனவரி 16) லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ABOUT THE AUTHOR

...view details