இதுதொடர்பாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 3 மாதங்களில் பொது விநியோக திட்டத்தில் கொடுக்கப்படும் பொருள்களை கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்ட புகாரில் 2 ஆயிரத்து 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசி கடத்தல் தொடர்பாக ஆயிரத்து 918 வழக்குகளும், மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 66 வழக்குகளும், இதர இனங்களில் 51 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம்,ஆயிரத்து 255 மெட்ரிக் டன் அரிசியும், 7 ஆயிரத்து 673 லிட்டர் மண்ணெண்ணெய் கைபற்றப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இரண்டு கோடியே 2 லட்சம் 19 ரூபாய். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 27 பேர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் பொருள்களை கடத்தினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு - வாகங்கள் பறிமுதல்
பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருள்களை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு