சென்னை: சட்டவிரோதமாக தனியார் நிறுவனத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலாளர் உட்பட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணம் வைத்து சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் விருகம்பாக்கம் இளங்கோ நகர் தெற்கு பிரதான சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு காவலர்கள் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது நிறுவனத்தின் தனி அறையில் சோதனை மேற்கொண்டபோது சுமார் ஏழு நபர்கள் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.