தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி - தமிழர்கள் என்பதால் மட்டும் விடுதலை செய்யக்கூடாது

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி seven-convicts-in-rajiv-case-release-we-didnt-agree-says-ks-alagiri
எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

By

Published : May 21, 2021, 4:18 PM IST

30 ஆண்டுகள் சிறை: சட்டப்பேரவையில் தீர்மானம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைக்கு கடிதம் எழுதி, வலியுறுத்தி வருங்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கும் எழுவர் விடுதலையும்
இந்த நிலையில், ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு நேற்று (மே.20) கடிதம் எழுதியுள்ளார்.

ராஜிவ் வழக்கும் எழுவர் விடுதலையும்

தமிழர்கள் என்பதால் மட்டும் விடுதலை செய்யக்கூடாது

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்து அவர் பேசுகையில், "7 தமிழர்களை விடுதலை செய்வதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார். அவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டும் விடுதலை செய்யக்கூடாது.

'தமிழர்கள் என்பதால் மட்டும் விடுதலை செய்யக்கூடாது'

ஸ்டாலின் கடிதத்தில் உடன்பாடு இல்லை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை. மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அக்கட்சியின் கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஸ்டாலின் கடிதத்தில் உடன்பாடு இல்லை - கே.எஸ்.அழகிரி

எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதனை வலியுறுத்தவில்லை. எனவே, எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக உடன் கூட்டணி அமைத்தாலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெறுபவர்களை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சி முரண்பட்டு நிற்கிறது.

ABOUT THE AUTHOR

...view details