தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் நகராட்சியில் காய்கறி கடைகள் அமைக்கும் பணி தீவிரம் - corona latest news

சென்னை: தாம்பரம் நகராட்சியில் திறந்த வெளியில் காய்கறி கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

-tambaram-municipality
-tambaram-municipality

By

Published : Mar 27, 2020, 9:05 PM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியவசியப் பொருள்கள் பொதுமக்களை சென்றடைய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளியில் காய்கறி கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தாம்பரம் நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதையடுத்து இன்று அந்த மைதானத்தில் காவல்துறை தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் சந்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காய்கறிகள் கடைகள் அமைக்கும் பணி

இது குறித்து நகராட்சியினர், இந்தக் காய்கறி சந்தை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். அறுபது கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இரண்டாம் நிலைக்கு செல்கிறது கரோனா - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details