தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர், மோர் பந்தல்கள் அமையுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்! - chennai latest news

சென்னை : கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு அதிமுக தொண்டர்கள் குடிநீர், மோர் பந்தல்கள் அமைக்க வேண்டுமென ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

By

Published : Apr 9, 2021, 6:18 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் , ”அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர், மோர் பந்தல்களை அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு? சத்ய பிரத சாகு சூசகம்

ABOUT THE AUTHOR

...view details