சென்னை: 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் கபில்தேவ் தலைமையில், ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் விளையாடினர். இந்தியா உலகக்கோப்பை வென்றதன் 40ஆம் ஆண்டு வெற்றி தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது.
இந்தியா உலகக்கோப்பை வென்ற 40ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு! - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய அணி உலகக்கோப்பை வென்றதன் 40ஆம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
![இந்தியா உலகக்கோப்பை வென்ற 40ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு! celebrate](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17071691-344-17071691-1669803386477.jpg)
celebrate
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இன்று(நவ.30) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். உலகக்கோப்பை வென்றதன் 40ஆம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நினைவுப்பரிசையும் வழங்கினார்.
இதையும் படிங்க: FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்