ஆவின் பால் விநியோகம் செய்ய, 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி டெண்டர் கோரியது. இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி ஸ்ரீதேவ் டிரான்ஸ்போர்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா அண்ட் கம்பெனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ஆவின் பால் விநியோகம்: லாரிகளின் டெண்டர் ரத்து - சென்னை
சென்னை: ஆவின் பால் விநியோகம் செய்வதற்கான டேங்கர் லாரிகளுக்கான டெண்டரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த மனுவில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்திற்கு தேர்தல் அறிவித்த பின்னர் பால் விநோயகம் செய்வதற்கான டெண்டர் கோருவது தவறு எனக் கூறப்பட்டிருந்தது. அதே போல கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநோயகம் செய்த நிறுவனங்களே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை எதிர்த்து தீபிகா ட்ரான்ஸ்போர்ட்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம் எனக் கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேநேரம் மூன்றாண்டுகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்தால்தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை உறுதி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.