சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தெடர்ந்து நடைபெற்றுவந்தன. இது குறித்து பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன், ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை காவல் துறையினர் பார்த்தனர். அப்போது இதில் தொடர்புடையவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்த பிரதீப் (26), ஜெனுசன் (25) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.