சென்னை: பெருங்களத்தூா் அருகே காந்திநகரில் வசிப்பவர் சந்திரா(75). இவர் வழக்கம்போல இன்று (ஏப்ரல் 15) காலை மணியளவில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டியிருந்தார்.
அப்போது, கார் ஒன்று சந்திராவின் வீடு அருகே வந்து நின்றது. காரிலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்திராவை அழைத்து முகவரி கேட்டார். அப்போது, காரிலிருந்த மற்றொருவர் மின்னல் வேகத்தில் சந்திரா அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு, சந்திராவை கீழே பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம், குறித்து அருகில் உள்ள பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.