தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருவை கலைக்க சின்னத்திரை நடிகை திவ்யா முயற்சி - கணவர் புகார் - Arnav

சின்னத்திரை நடிகை திவ்யா கருவை கலைக்க தனது நண்பருடன் சேர்ந்து முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் அவரது கணவரும், நடிகருமான அரணவ் புகார் அளித்துள்ளார்.

குழந்தையை கலைக்க சின்னத்திரை நடிகை திவ்யா முயற்சி - கணவர் புகார்
குழந்தையை கலைக்க சின்னத்திரை நடிகை திவ்யா முயற்சி - கணவர் புகார்

By

Published : Oct 7, 2022, 7:27 AM IST

Updated : Oct 7, 2022, 11:19 AM IST

சென்னைமதுரவாயலை சேர்ந்தவர் நைனா முகமது என்ற அரணவ். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் ‘செவ்வந்தி’ என்னும் தொடரில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

இதனையடுத்து நடப்பாண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திவ்யா கருவுற்றுள்ளார். இந்த நிலையில் திவ்யா, கணவர் அரணவ் தன்னை தாக்கியதாக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரச்னை உருவாகியது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திவ்யாவின் கணவர் அரணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவில், “எனது மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துகிறார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் மற்றும் இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் அர்ணவ் பேட்டி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அரணவ், “எனக்கும் திவ்யாவிற்கும் திருமணம் நடைபெற்ற அன்றுதான், அவளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்ததும், பின்னர் விவாகரத்து ஆகியுள்ளதும் தெரிய வந்தது. இதனைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் காதல் காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தேன்.

என் மனைவியை நான் தாக்கியதாக கூறும் நேரத்தில், நான் அவருடன் இல்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதனை காவல்துறை கேட்கும்போது காண்பிக்க தயாராக இருக்கிறேன். நான் அடித்துதான் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதா அல்லது எனது குழந்தையை அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து கருவை கலைக்க முயற்சி செய்தாரா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஈஸ்வர் என்பவர் எனக்கு நன்மை செய்வதாக கூறி இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார். என்னை அடிக்கடி மிரட்டி வருகிறார். நான் விவாகரத்து செய்துவிடுவேன் என எங்கும் கூறவில்லை. எனது மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவர் கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நடிகை ஜெசிக்கா தற்கொலை வழக்கு - காதலன் சிராஜிதீனிடம் 3 மணி நேரம் விசாரணை

Last Updated : Oct 7, 2022, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details