தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா நோயாளிகள் குறித்த தகவல்களைப் பராமரிக்க உதவி மையங்கள்' - சென்னை மாநகராட்சி தகவல் - corporation report

சென்னை: கரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய விவரங்களைப் பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோயாளிகள் குறித்த தகவல்களை பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் !
கோவிட்-19 நோயாளிகள் குறித்த தகவல்களை பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் !

By

Published : Aug 1, 2020, 3:09 AM IST

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் என்ற முதியவர், திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல்போனார்.

அவரைக் கண்டுபிடித்து மீட்கக் கோரி அவரது மகன் துளசிதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சென்னையில் உள்ள நான்கு முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், 51 ஆதரவற்றோர் முகாம்களிலும் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் முதியவர் ஆதிகேசவன் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் எப்போது அனுமதிக்கப்பட்டார்கள், எப்போது குணமடைந்து வீடு திரும்பினார்கள் உள்ளிட்ட விவரங்களைப் பராமரிப்பதற்காக, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், காணாமல்போன ஆதிகேசவன் பற்றிய விரிவான அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details