தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு - அமைச்சர் பொன்முடி - seat exam

தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : May 15, 2022, 8:01 PM IST

சென்னை:அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தேசியக்கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிக்கும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல மொழிகள், பல இனங்கள் , பல கலாசாரம் கொண்ட இந்த நாட்டில் சிலர் ஒரே நாடு என்ற தத்துவத்தை திணிக்கன்றனர் என குற்றஞ்சாட்டினார்.

இதனைத்தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் தனிக்கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும், அதன்படியே இங்கு உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி தீர்மானிக்கப்படும் எனவும்; தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கின்ற சியட் தேர்வை எதிர்ப்பதில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

மேலும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும் , சியட் தேர்வுக்கு எதிராகவும் அனைத்து மாணவர்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும்

வேண்டுகோள்விடுத்தார்.

சியட் தேர்வை எதிர்ப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் பொன்முடி

.

இதையும் படிங்க:விரும்பும் மொழியை மூன்றாவதாக கற்பிப்பதை எதிர்க்கவில்லை - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details