தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்...நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கென தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து, மாணவர்கள் நலன் கருதி யூனியன் பிரதேச அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

govt school student pass JEE Mains with help of nit students
திருச்சி என்ஐடி மூலம் ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்

By

Published : Sep 18, 2021, 12:34 PM IST

சென்னை:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. இதனால், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குறிப்பாக 10, 12ஆம் வகுப்புகளுக்கு என தனி பாட திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறப்பானதாக இருக்கும் என்ற போதும், இதுதொடர்பாக அரசு அலுவலர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு நான்கு வாரங்களில் புதிய கோரிக்கை மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பள்ளிகள் எண்ணிக்கை, தனிப்பட்ட பாடத் திட்டம் வழங்குவதின் தேவை ஆகியவற்றை பரிசீலித்து, 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு, விரைந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோடநாடு வழக்கு: காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details