தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் காவலுக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி - போலீஸ் காவல்

அமலாக்கத் துறையினர் 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்ததற்கான ஆவணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கையெழுத்திட்டார்.

போலீஸ் காவலுக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி
போலீஸ் காவலுக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி

By

Published : Jun 17, 2023, 2:06 PM IST

சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி, முதலில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், நேற்று (ஜூன் 16) காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

அதேநேரம், 15 நாட்கள் அமலாக்கத் துறையினர் காவல் கோரிய மனு தொடர்பாக செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நேற்று முதல் வருகிற 23ஆம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரித்து விட்டு, மீண்டும் மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி அல்லி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு நேற்று (ஜூன் 16) நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக வந்தனர். அப்போது அவர் சுய நினைவில் இல்லாததால், அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது.

இந்த நிலையில், தற்போது நீதிமன்ற ஊழியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதற்கான ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். மேலும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளித்து வந்த சிறைத்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு, மத்திய காவல் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது.

எனவே, அமலாக்கத்துறை விசாரணை தொடங்க உள்ள நிலையில், காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள 7வது மாடி முழுவதும் மத்திய காவல் படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட இருக்கிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவினர் சென்னை வர இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்; மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details