தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித் ஷா எச்சரிக்கையால் பதுங்கிய ஆளுநர்!.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்தது என்ன? - Amit Shah advices Ravi to seek legal opinion

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யும் ஆளுநர் ரவியின் முடிவு, டெல்லி மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைளை சட்ட ஆலோசனைக்குப் பின் மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தில் தலையிடும் அமித்ஷா
செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தில் தலையிடும் அமித்ஷா

By

Published : Jul 1, 2023, 1:46 PM IST

சென்னை:செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக தான் வெளியிட்ட அறிவிப்பை , சில மணி நேரங்களில் தானே நிறுத்தி வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த பின்வாங்கல் டெல்லியிலிருந்து பறந்த உத்தரவின் விளைவால் நிகழ்ந்துள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் ஆளுநரின் முடிவு, அரசியலமைப்பு சர்ச்சைக்கு (Constitutional Crisis) வழி வகுத்துவிடக் கூடாது என்பதால் சட்ட ஆலோசனைகளை பெற்ற பின் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி (D.O. Letter no 0014/RBTN/2023) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின் பேரில், அட்டார்னி ஜெனரலின் ஆலோசனையையும் கேட்க வேண்டியது உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் குறித்த தமது உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சக வட்டார தகவல்களின் படி, பதவிநீக்க உத்தரவுக்கு முன்னதாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி , குடியரசுத் தலைவரின் மூலமாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே மணிப்பூர் விவகாரத்தில் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகள், இதனை அமித் ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொண்ட அமித்ஷா, இதனை எவ்வாறு கவனமாக கையாள வேண்டும், சட்ட ஆலோசனை எவ்வளவு அவசியம் என்பதை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், இந்நாள் ஆளுநருமான ஆர்.என்.ரவிக்கு விளக்கியுள்ளார். இதனையடுத்தே செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் கடிதம் மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில், தமது அறிவுரைக்கு மாறாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்கச் செய்வது தொடர்பாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்ந்தால், அவர் மீதான வழக்கின் விசாரணையில் இடையூறு ஏற்படும் என்பதற்கு நம்பத்தகுந்த காரணங்கள் இருப்பதாகவும் ஆளுநர் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய நிலை தொடர்ந்தால் மாநிலத்தின் அரசியமைப்பு எந்திரம் உடைந்து போகும் எனவும் தமது கடிதத்தில் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details