சென்னை:அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தேசிய சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தி இந்து குழுமத்தின் இயக்குனரும், மூத்த பத்திரிக்கையாளருமான என்.ராம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “செங்கோல் என்பது ஒரு பெருமையான விஷயம் இல்லை. மன்னர் ஆட்சி நீக்கி மக்கள் ஆட்சி வந்த உடன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மோடி மீண்டும் மன்னர் ஆட்சி கொண்டு வருவதற்கு இந்த செங்கோல் எடுத்து வருகிறார். அது சோழ, சேர, பாண்டியர் தாயாரித்த செங்கோல் இல்லை அது உம்மீடி பங்காரு செட்டியார் செய்தது.
இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இந்த பாராளுமன்ற திறப்பு விழாவின் போது ஆன்மிகம் அடிப்படையில் என்றால் சங்கராச்சாரியார் வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. தமிழக ஆதினம் மட்டும் அழைத்தது ஏன்? அதுமட்டுமின்றி கிருத்துவம், முஸ்லிம் என்று அனைத்து குரு மார்களை அழைத்து இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
தொடந்து பேசிய என்.ராம், “செங்கோல் பற்றி பல கட்டு கதைகள் தற்போது அரசியலில் வந்து உள்ளது. தற்போது நடிகர்கள் வைத்து நடித்து இந்த கட்டு கதையை அரசு இனையதளதில் வெளியிட்டு உள்ளனர். நேரு பிரதமராக பதவி ஏற்பதற்கு ஏதேனும் விழா நடத்த வேண்டுமா என மவுண்ட் பேட்டன் பிரபு கேட்டதாக சொல்வதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. இவர்கள் சொல்வது கட்டுக்கதை.