சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் (90) சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி - Congress leader Kumari Ananthan
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
அங்கு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவர் குழுவினர், குமரி அனந்தனை கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காந்தி கோயிலில் அபிஷேக ஆராதனை - குமரி அனந்தன் பங்கேற்பு